×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆக்சிஜன் டியூப் வெடித்து சோகம்.. பெண் பரிதாப பலி.!  

Karaikal News: அவசர ஊர்தியில் இருந்த ஆக்சிஜன் டியூப் வெடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

Advertisement

நெஞ்சு வலியால் அவதிப்பட்ட பெண் ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

சிகிச்சை: 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடி பகுதியில் வசித்து வருபவர் ரேவதி (வயது 45). இவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வருகிறார். இதனிடையே, சம்பவத்தன்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: பேருந்தின் கதவு இடுக்கில் சிக்கி துள்ளத்துடிக்க சிறுவன் பலி.. பதறவைக்கும் காட்சிகள்.! 

ஆம்புலன்சில் பயணம்: 

அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு வெண்டிலெட்டருடன் கூடிய அரசு மருத்துவமனை அவசர ஊர்தியில் அனுப்பி வைக்கப்பட்டார். இவர்களின் வாகனம் சிதம்பரம் பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. 

டியூப் வெடித்தது: 

அப்போது, ரேவதிக்கு சுவாசம் அளித்த ஆக்சிஜன் டியூப் திடீரென வெடித்து சிதறியது. இதனால் டியூப் துண்டிக்கப்பட்டு ரேவதி மூச்சுத்திணறிக்கொண்டு இருந்தார். இதனையடுத்து, உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு ரேவதி கொண்டு செல்லப்பட்டார். 

உயிரிழப்பு: 

அங்கு ரேவதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆக்சிஜன் டியூப் வெடித்த செய்தி அறிந்த ரேவதியின் உறவினர்கள் மற்றும் எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் காரைக்கால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆம்புலன்ஸை பறிமுதல் செய்தனர். 

இதையும் படிங்க: இணை பிரியாத தம்பதிகளாக நேர்ந்த சோகம்.. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #death #Cuddalore #Pondicherry Karaikal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story