×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேருந்தின் கதவு இடுக்கில் சிக்கி துள்ளத்துடிக்க சிறுவன் பலி.. பதறவைக்கும் காட்சிகள்.! 

7 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. 

Advertisement

பேருந்து பணிமனையில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

பராமரிப்பு மையம்: 

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா, டர்ஸில் பகுதியில் கே.ஜி. டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக வாகன நிறுத்துமிடம் & பராமரிப்பு பணியிடம் உள்ளது. இந்த இடத்தில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: இணை பிரியாத தம்பதிகளாக நேர்ந்த சோகம்.. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்.! 

குடியிருப்பு: 

மேலும், பணியாற்றும் ஊழியர்கள் குடும்பத்துடன் தங்கியிருக்க வீடும் வளாகத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, அங்குள்ள சோட்டு உத்புர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான தம்பதி தங்களின் குழந்தையுடன் இங்கு வசித்து வருகிறார்கள். 

7 வயது சிறுவன்: 

தம்பதிகளின் மகனான திவியேஷ் ரத்வாவுக்கு 7 வயது ஆகிறது. இவர் சம்பவத்தன்று பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். கடைக்குச் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். 

பேருந்து:   

அப்போது, பணிமனையில் இருந்த சொகுசு பேருந்தை கவனித்தவர், அதன் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், சிறுவனின் கழுத்து கதவில் சிக்கிக்கொண்டு உயிருக்கு துடித்துள்ளார். அச்சமயம், சிறுவனின் உறவினர்களான உடன் பணியாற்றி வரும் 2 நபர்கள் வெளியே சென்றுவிட்டு காரில் பணிமனைக்கு திரும்பினர்.

காப்பாற்ற முயற்சி: 

இவர்கள் இருவரும் சேர்ந்து உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.   

விசாரணை: 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுவன் பேருந்தின் கதவில் சிக்கி துடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆனால், இவை சந்தேகத்தை எழுப்புவதாக நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறுவன் எப்படி கதவை திறந்தார்? தானியங்கு முறையில் செயல்படும் கதவை அவரால் எப்படி இயக்க முடியும்? என பல ஊகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

முதற்கட்ட தகவலின்படி சிறுவன் பேருந்தில் அமர ஆசைப்பட்டு குறுகிய உடலால் உள்ளே செல்ல முயற்சித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பதறவைக்கும் காட்சிகள்:

காட்சிகள்

இதையும் படிங்க: தொடரும் மழை.. பதறும் கேரளா மக்கள்.. சரிந்த நிலம்.. 8 பேர் பலி.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #accident #gujarat #7 Year Old BOy #Bus Door
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story