×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடரும் மழை.. பதறும் கேரளா மக்கள்.. சரிந்த நிலம்.. 8 பேர் பலி.! 

தென்மேற்குப்பருவமழை மீண்டும் கேரளாவில் தொடங்கி இருக்கிறது. 

Advertisement

பருவமழை சீசன் காரணமாக கேரளாவில் உள்ள மலைக்கிராம மக்கள் வயநாடு சம்பவத்துக்குப்பின் அச்ச உணர்வுடன் வாழ்நாட்களை நகர்த்தி வருகின்றனர். 

தொடங்கியது மழை: 

கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே ஓய்ந்துபோன தென்மேற்குப்பருவமழை மீண்டும் பெய்யத்தொடங்கி இருக்கிறது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்கிறது. நேற்று 8 மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. இடுக்கி, கோட்டயம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் மழையும் பெய்தது. 

இதையும் படிங்க: #Breaking: கனமழை காரணமாக 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

நிலச்சரிவு மரணம்: 

மழை காரணமாக ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்படத்தொடங்கியது. அங்குள்ள குடையத்தூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வீடு மண்ணுக்கடியில் புதைந்து சுமதி என்ற பெண் உயிரிழந்தார். 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கோட்டயத்தில் பிரபாகரன் நாயர் (வயது 72) என்பவர் நிலச்சரிவில் உயிரிழந்தார். பூஞ்சார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ரெஜினா, அவரின் மகன் ஜோசப் ஜோனி (வயது 24) ஆகியோர் உயிரிழந்தனர்.  

சிறுவன் மரணம்: 

மலப்புரத்தில் ஓடையில் விழுந்த ஆதம் என்ற 4 வயது சிறுவன் மற்றும் அப்துல் குஹேனி என்ற 3 வயது சிறுவன் உயிரிழந்தனர். வயநாட்டில் வெள்ளநீரை வெளியேற்ற மோட்டார் இயக்கப்பட்டபோது, மின்சாரம் தாக்கி பென்னி என்பவர் உயிரிழந்தார். கோட்டயத்தில் குழியில் தவறி விழுந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் மிலன் உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தொடரும் நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பயணிகளுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கட்டுமான வேலையில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. 2வது மாடியில் காத்திருந்த எமன்.. தந்தை கண்முன் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #Kerala news #Landslide #rain #accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story