இனிமேலும் பொறுமை இல்லை... 2 ஆண்டுகளாக கிராமத்தில் நெட்வொர்க் இல்லை..! ஆத்திரமடைந்து டவர் ஊழியரை கட்டி வைத்த கிராம மக்கள்..! வைரல் வீடியோ..!!!
2 ஆண்டுகளாக நெட்வொர்க் இல்லை... டவர் ஊழியரை கட்டி வைத்த கிராம மக்கள்.. வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேஹ்பூர் மாவட்டத்தில், நீண்ட நாட்களாக மொபைல் நெட்வொர்க் சரிவர கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மொபைல் டவர் ஊழியர் ஒருவரை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தௌலி பகுதியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக செல்போன் அழைப்புகள் மற்றும் இணைய சேவையில் தொடர்ந்து பாதிப்பு இருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக 5ஜி சேவை கிடைக்காததால், அவசர நேரங்களில் அழைப்புகள் மேற்கொள்வதிலும் இணையத்தைப் பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நெட்வொர்க் பிரச்னையை சரிசெய்வதற்காக கிராமத்திற்கு வந்த டவர் ஊழியரை சிலர் பிடித்து, மொபைல் டவருடன் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. நெட்வொர்க் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: காதலருடன் செல்ல விரும்பிய மனைவி.. மனதை மாற்றாமல் கணவர் எடுத்த விநோத முடிவு!
இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, டவருடன் கட்டி வைக்கப்பட்டிருந்த ஊழியரை மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
மேலும், ஊழியரை சிறைபிடித்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, கிராமத்தில் நீண்ட காலமாக நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: SBI வங்கியில் மிளகாய் பொடியை ஊழியர்கள் கண்களில் வீசி கொள்ளை...! அடுத்த 30 நிமிடத்தில் பாய்ந்த போலீஸ்.... சிக்கிய சிசிடிவி காட்சி!!!