×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலருடன் செல்ல விரும்பிய மனைவி.. மனதை மாற்றாமல் கணவர் எடுத்த விநோத முடிவு!

காதலருடன் செல்ல விரும்பிய மனைவி.. மனதை மாற்றாமல் கணவர் எடுத்த விநோத முடிவு!

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே, காதலருடன் வாழ விரும்பிய மனைவியின் முடிவை கணவர் ஏற்றுக்கொண்டு, அவரையே காதலருடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மலிஹாபாத் அருகே கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம், அந்தப் பெண்ணுக்கும் மாகாண ரக்ஷக் தளம் (PRD) பணியாளரான நபருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் கணவர் வீட்டில் இருந்து யாரிடமும் தெரிவிக்காமல் வெளியேறியுள்ளார்.

மனைவியைக் காணவில்லை என கணவர் மலிஹாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, அந்தப் பெண் தனது காதலருடன் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அதுக்குன்னு இப்படியா... மனைவி, 3 பிள்ளைகள் தவிக்க விட்டு திருநங்கையுடன் குஜாலாக இருக்கும் கணவன்! இன்ஸ்டாவில் ரொமான்ஸ் வீடியோ போட்டு அட்டகாசம்.... அழுது புலம்பும் மனைவி!!!

இதையடுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் கணவரின் குடும்பத்தினரும் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.மனைவி மீண்டும் தன்னுடன் வாழ வேண்டும் என குடும்பத்தினர் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அந்தப் பெண் தனது முடிவில் உறுதியாக இருந்து, காதலருடன்தான் வாழ விரும்புவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது விருப்பத்தை கணவரும் ஏற்றுக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன், அந்தப் பெண்ணும் அவரது காதலரும் அருகிலுள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இரு குடும்பத்தினரும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பல விதமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: பெண்களின் விடுதி கழிப்பறையில் ரெக்கார்டிங் மோடில் இருந்த ரகசிய மொபைல் போன்! லீக்கான அதிர்ச்சி வீடியோ....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Malihabath #Love marriag #Lucknow
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story