பெண்களின் விடுதி கழிப்பறையில் ரெக்கார்டிங் மோடில் இருந்த ரகசிய மொபைல் போன்! லீக்கான அதிர்ச்சி வீடியோ....!!!
உத்தரப் பிரதேசம் கோரக்பூர் பெண்கள் விடுதி கழிப்பறையில் ரெக்கார்டிங் மோடில் இருந்த செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பெண்கள் விடுதி கழிப்பறையில் ரெக்கார்டிங் மோடில் வைக்கப்பட்டிருந்த செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்த மாணவிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
கழிப்பறையில் சந்தேகத்திற்கிடமாக வைக்கப்பட்டிருந்த ரெக்கார்டிங் செல்போன் குறித்து மாணவிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த மொபைல் போனை கைப்பற்றி, விடுதியின் பெண் வார்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கழிப்பறையில் சிக்கிய ரெக்கார்டிங் மோடில் இருந்த போன்
மாணவிகளின் கவனத்திற்கு வந்த அந்த செல்போன் எதற்காக அங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. மேலும், அதில் ஏற்கனவே ஏதேனும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதும் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.
தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிய போலீசார்
கைப்பற்றப்பட்ட மொபைல் போன் தற்போது தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எப்போது முதல் அந்த போன் அங்கு வைக்கப்பட்டிருந்தது, அதில் பதிவுகள் உள்ளனவா உள்ளிட்ட விவரங்கள் ஆய்வின் மூலம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தடயவியல் அறிக்கை கிடைத்த பிறகே விவகாரத்தின் முழு பின்னணி தெளிவாகும் என கூறியுள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பெண்கள் விடுதி நிர்வாகம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: குழந்தை யாருக்கு பிறந்தது?.. மனைவி மீது சந்தேகம்.. 3 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!