×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'நரகத்தில் இருக்கிறேன்'.. மிஸ் அழகி துவிஷா உயிரிழப்பு.. நண்பர்களுடன் உடலை தூக்கிச்சென்ற கணவர்.. அதிர்ச்சி வீடியோ.!

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான வழக்கறிஞரை திருமணம் செய்த மிஸ் புனே அழகி துவிஷா உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

டேட்டிங் செயலி மூலம் காதலித்து திருமணம் செய்த மிஸ் புனே அழகி துவிஷா சர்மா, கணவர் வீட்டில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவை சேர்ந்தவர் துவிஷா சர்மா (வயது 31). கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் புனே அழகி பட்டம் பெற்ற இவர், டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே டேட்டிங் செயலி மூலம் வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் பழகி இருக்கிறார். 

தூக்கிட்டு தற்கொலை:

இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில், போபால் நகரில் வசித்து வந்துள்ளனர். இவர்களுடன் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபலா சிங் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கணவரின் வீட்டில் துவிஷா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். 

இதையும் படிங்க: சாதி வெறியால் மகளின் காதலனை கொன்ற குடும்பம்.. சடலத்தை மணந்த காதலி.. கலங்கவைக்கும் வீடியோ.!

வரதட்சணை கொடுமை?

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த குடும்பத்தினர் பெண்மணியின் மரணத்திற்கு அவரது கணவர் மற்றும் மாமியாரே காரணம் என புகார் அளித்துள்ளனர். மாமியார் வீட்டில் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

கஞ்சா பழக்கத்திற்கு அடிமை?

மேலும் துவிஷா தான் நரகத்தில் இருப்பதாகவும், தன்னை அழைத்துச் செல்லுமாறும் தனது குடும்பத்தாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
இதுதொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், துவிஷாவின் மாமியார் தனது மருமகளுக்கு போதைப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கம் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

மனைவியின் உடலை தூக்கிச்சென்ற கணவர்:

இதனிடையே துவிஷாவின் கணவர் தனது மனைவியின் உடலை இரு நண்பர்களுடன் சேர்த்து தூக்கிச்செல்லும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Miss Pune #Duvisha Sharma death #மிஸ் புனே அழகி #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story