சாதி வெறியால் மகளின் காதலனை கொன்ற குடும்பம்.. சடலத்தை மணந்த காதலி.. கலங்கவைக்கும் வீடியோ.!
மகாராஷ்டிராவில் மகளின் காதலனை தந்தை மற்றும் சகோதரர்கள் சேர்ந்து கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை அவரது காதலனை கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. காதலனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பெண்மணி அவரது சடலத்தை மணந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நத்தேட் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாக்ஷம் டேட் (வயது 20). இவரும் அதே பகுதியை சார்ந்த ஆஞ்சல் என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெண்மணி தனது சகோதரரின் நண்பரை காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படும் நிலையில், பலமுறை இவர்களை மிரட்டியும் காதலை கைவிடவில்லை.
காதலனை கொன்ற தந்தை:
மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்யலாம் என்ற முடிவிலும் இருந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் காதலனை கடுமையாக தாக்கி தலையில் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மன வேதனையில் இருந்த பெண்மணி தனது காதலனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு நெற்றியில் திலகமிட்டு காதலனின் சடலத்தை மணந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்.. காதலன் பதறவைக்கும் செயல்.. தஞ்சாவூரில் பேரதிர்ச்சி.!
சடலத்தை மணந்த காதலி:
இறுதிவரை தனது காதலனின் மனைவியாக அவரது வீட்டில் இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் என 6 பேரை கைது செய்த காவல்துறையினர் தற்போது சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெற்றியில் குங்கும திலகமிட்டு கண்ணீருடன் காதலனை திருமணம் செய்த காதலி: