×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாமியாரின் மூக்கை வெட்டி கையில் எடுத்துச் சென்ற மருமகன்.. குடும்ப தகராறில் கொடூரம்.!

ராஜஸ்தானில் குடும்ப மோதல் காரணமாக ஆவேசமடைந்த மருமகன் தனது மாமியாரின் மூக்கை வெட்டி கையில் எடுத்துச்சென்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

குடும்ப தகராறில் மாமியாரின் மூக்கை மருமகன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலோர் மாவட்டம் துங்காரி கிராமத்தில் வசித்து வருபவர் சோகன் லால். இவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் தம்பதிகளுக்கு இடையே இருந்த குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். 

கணவன் - மனைவி சண்டை:

இதனால் இருவரும் ஓராண்டாக தனித்தனியாக வசித்து வரும் நிலையில், மனைவியின் குடும்பத்தாருடன் மோகன்லாலுக்கு நீண்டகால மோதல் போக்கும் இருந்து வந்துள்ளது. இரு குடும்பத்தாரும் சண்டையிட்டும் வந்துள்ளனர். உறவினர்கள் பலரும் தம்பதிகளை சேர்த்து வைக்க முயற்சி எடுத்தும் பலன் இல்லாத நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!

மூக்கை வெட்டிய மருமகன்:

நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சோகன் லாலின் மாமியார் கெலி தேவி தனது மருமகன் மீது புகார் அளிப்பதற்காக காவல் நிலையம் புறப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த சோகன் லால் தனது மனைவியின் தாயார் என்றும் பாராது மாமியாரின் மூக்கை வெட்டி தனது கையுடன் எடுத்துச் சென்றுள்ளார். 

குற்றவாளிக்கு வலைவீச்சு:

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றவாளியான சோகனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரிந்து சென்ற மனைவி மகிழ்ச்சியாக இருந்ததால் கொடூர கொலை.. சைக்கோ கணவன் வெறிச்செயல்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ராஜஸ்தான் #rajasthan #mother in law #Crime news #Husband wife fight #மாமியார்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story