பிரிந்து சென்ற மனைவி மகிழ்ச்சியாக இருந்ததால் கொடூர கொலை.. சைக்கோ கணவன் வெறிச்செயல்..!
மனைவி மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிய கணவர், மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
குடும்ப தகராறில் பிரிந்து சென்ற முதல் மனைவி மகிழ்ச்சியாக இருந்ததால் மனைவி மற்றும் மாமியாரை கணவர் கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காதல் திருமணம்:
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம் சுப்பாராவ் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சீதாராம ராஜூ. இவர் பைனான்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த லதா என்ற 32 வயது பெண்மணியும் காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். தம்பதிக்கு 3 குழந்தைகளுக்கு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!
போக்ஸோ வழக்கில் கைது:
இந்த நிலையில் சீதாராம ராஜூ போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவே, கணவரின் பைனான்ஸ் வேலையை லதா கவனித்து வந்துள்ளார். இதனிடையே ஜாமினில் வெளியே வந்த சீதாராமராஜுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த கணவர் மதுபோதையில் லதாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
கட்டாய திருமணம்:
இதில் படுகாயமடைந்த லதா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அங்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பின் மீண்டும் இருவருக்கும் தகராறு அதிகரித்த நிலையில், ஓராண்டுக்கு முன் பிரிந்துள்ளனர். மூன்று குழந்தைகளையும் சீதாராமராஜு பராமரித்து வந்த நிலையில், தனது எதிர் வீட்டில் வசித்து வந்த குமாரி என்ற பெண்ணை கட்டாயத் திருமணம் செய்துள்ளார். தற்போது இவரது இரண்டாவது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், உறவினர் வீட்டில் தங்கி இருந்த முதல் மனைவி தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து கொலை:
இதுகுறித்த தகவலறிந்த சீதாராம ராஜ் குழந்தைகளை தன்னிடம் விட்டுவிட்டு மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக நினைத்து ஆத்திரமடைந்துள்ளார். இதனால் முதல் மனைவியை கொல்ல திட்டமிட்டவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் மூன்று பேருடன் லதாவின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். அதனை தடுக்க வந்த லதாவின் தாய் லட்சுமி (வயது 50) என்பவரையும் வெட்டி இருக்கிறார்.
குற்றவாளி கைது:
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குற்றவாளியான சீதாராமராஜு மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 3 மனைவிகள் இருந்தும் தீராத ஆசை.. வீட்டிற்குள் கதறல் சத்தம்.. பதறி வந்த மக்கள்.. தமிழகத்தில் பயங்கரம்..!