×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தையின் அழுகையை கேட்டு ஓடி வந்த நாத்தனார்.. காத்திருந்த அதிர்ச்சி.. சமையலறையில் மருத்துவர் மர்ம மரணம்!

குழந்தையின் அழுகையை கேட்டு ஓடி வந்த நாத்தனார்.. காத்திருந்த அதிர்ச்சி.. சமையலறையில் மருத்துவர் மர்ம மரணம்!

Advertisement

 கேரளாவைச் சேர்ந்த 32 வயதான பல் மருத்துவர் டாக்டர் அஃபினா ரஹீம், வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளின் தாயான அஃபினா, குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக தற்காலிகமாக பணியில் இருந்து விடுப்பு எடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை காலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அஃபினா திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது. அந்த நேரத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் அவரது கணவர் யாசர் பள்ளிக்குச் சென்றிருந்தார்.

இதற்கிடையே, வீட்டில் இருந்த அஃபினாவின் நாத்தனார், குழந்தையின் தொடர் அழுகுரலைக் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது, அஃபினா சமையலறையில் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: ஆற்றில் மிதந்த சாக்கு மூட்டைகள்... இளம்பெண், 5 வயது சிறுமி கொடூரக் கொலை? கேரளாவில் பெரும் அதிர்ச்சி

மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அஃபினாவை காப்பாற்ற முடியவில்லை. இதுவரை அவருக்கு குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நோய்கள் இருந்ததாக தெரியவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

அஃபினாவின் திடீர் மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. அவரது உடலை கேரளாவுக்கு கொண்டு செல்வதற்கான சட்ட நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Zipline சவாரி : இளைஞரின் சட்டையை பிடித்து இளம்பெண் செய்த காரியம்.. துடிதுடித்து உயிரிழநத 24 வயது இளைஞர்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mystry death #KERALA #Dental doctor #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story