ஆற்றில் மிதந்த சாக்கு மூட்டைகள்... இளம்பெண், 5 வயது சிறுமி கொடூரக் கொலை? கேரளாவில் பெரும் அதிர்ச்சி
ஆற்றில் மிதந்த சாக்கு மூட்டைகள்... இளம்பெண், 5 வயது சிறுமி கொடூரக் கொலை? கேரளாவில் பெரும் அதிர்ச்சி
ஆற்றில் மிதந்த சாக்கு மூட்டைகள்... இளம்பெண், 5 வயது சிறுமி கொடூரக் கொலை? கேரளாவில் பெரும் அதிர்ச்சிகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் மிதந்து வந்த சாக்கு மூட்டைகளில் இளம்பெண் மற்றும் 5 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடி பவானி ஆற்றின் சீரக்கடவு படித்துறை பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுமார் 3 சாக்கு மூட்டைகள் ஆற்றில் மிதந்து வந்துள்ளன. அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள், சாக்கு மூட்டைகளை சந்தேகத்தின் பேரில் கரைக்கு கொண்டு வந்து பார்த்துள்ளனர்.
அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மற்றும் 5 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட தலைகள், மேலும் மற்ற மூட்டைகளில் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், உடனடியாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: Zipline சவாரி : இளைஞரின் சட்டையை பிடித்து இளம்பெண் செய்த காரியம்.. துடிதுடித்து உயிரிழநத 24 வயது இளைஞர்..!
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த புதூர் போலீசார், சாக்கு மூட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், கொலை நடந்து சுமார் 4 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இளம்பெண்ணையும் சிறுமியையும் மர்ம நபர்கள் கொலை செய்து, உடல்களை துண்டித்து சாக்கு மூட்டைகளில் கட்டி பவானி ஆற்றில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், கொலைக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.மேலும், விசாரணையில், அந்த சாக்கு மூட்டைகள் கோவையிலிருந்து மளிகைப் பொருட்கள் கொண்டு வருவதற்காக அட்டப்பாடி கோட்டத்தரா பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அனுப்பப்பட்டவை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தினராக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையில் ஈடுபட்டவர்கள் யார், உயிரிழந்தவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அட்டப்பாடி மற்றும் பாலக்காடு பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இணை பிரியாத தம்பதிகளாக நேர்ந்த சோகம்.. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்.!