×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூர முடிவு..! பெற்ற தாயை கொன்ற மகள்.. மகனின் வாக்குமூலத்தால் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!!

கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூர முடிவு.. பெற்ற தாயை கொன்ற மகள்.. மகனின் வாக்குமூலத்தால் சிக்கிய உண்மை!

Advertisement

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின்பேட்ட பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற தாயை, காதலனுடன் சேர்ந்து மகளே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கேபின்பேட்ட பகுதியைச் சேர்ந்த ஈவூரு லட்சுமி (48) என்பவருடன் அவரது மகள் புஷ்பலதா மற்றும் பேரன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. புஷ்பலதாவின் கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அவர் தனது மகனுடன் தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், புஷ்பலதாவுக்கு ராஜா என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த உறவை அறிந்த லட்சுமி, மகளை கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புஷ்பலதாவும் ராஜாவும், தங்களுக்கு இடையூறாக இருந்த லட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கணவர் மரணத்தில் திடீர் திருப்பம்... மனைவி, மாமியார் கைது.. பின்னணியில் கள்ளத்தொடர்பு?

அதன்படி, லட்சுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி மூச்சுத்திணறடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலைக்குப் பின்னர், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு புஷ்பலதாவும் ராஜாவும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும், தனது பெற்ற மகனையும் தனியாக விட்டுச் சென்றுள்ளனர்.

மறுநாள் காலை சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது, தனது தாயும் ராஜாவும் இணைந்து பாட்டியை கொலை செய்ததாக சிறுவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து பொன்னூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள புஷ்பலதா மற்றும் ராஜாவை தேடி வருகின்றனர். பெற்ற மகனின் வாக்குமூலத்தின் மூலம் தாயின் கொலைக்கான காரணமும், குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்களின் விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 3 குழந்தைகளின் தாய்... 13 வயது இளைய இளைஞருடன் காதல்! வீட்டில் சிக்கியதால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affair #Love problem #Andhra Pradesh #kundur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story