×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 குழந்தைகளின் தாய்... 13 வயது இளைய இளைஞருடன் காதல்! வீட்டில் சிக்கியதால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

3 குழந்தைகளின் தாய்... 13 வயது இளைய இளைஞருடன் காதல்! வீட்டில் சிக்கியதால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertisement

உத்தரப் பிரதேசத்தில் 3 குழந்தைகளுக்குத் தாயான பெண்ணுக்கும், அவரைவிட 13 வயது இளைய 23 வயது இளைஞருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகாத அந்த இளைஞர், தனது காதலியை சந்திப்பதற்காக அவர் தங்கியிருந்த மாமியார் வீட்டுக்கு ரகசியமாக சென்றுள்ளார். 

இளைஞர் வீட்டுக்குள் வந்ததை அறிந்த குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட அறைக்குச் சென்று பார்த்தபோது, பெண்ணும் அந்த இளைஞரும் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் இருவரையும் பிடித்து தாக்கியுள்ளனர்.

மேலும், இருவரையும் வெளியே செல்லவிடாமல் அதே அறைக்குள் பூட்டி வைத்ததாகவும், சுமார் 30 மணி நேரம் உணவு மற்றும் தண்ணீர் வழங்காமல் தாக்கி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: ₹2,000 பணத்துக்காக தகராறு... 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

அப்போது இளைஞரை மீட்க முயன்ற போலீசாருடனும் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு போலீசார் அந்த இளைஞரையும், பெண்ணையும் பத்திரமாக மீட்டதாக கூறப்படுகிறது. 3 குழந்தைகளுக்குத் தாயான பெண்ணுக்கும், அவரைவிட 13 வயது இளைய இளைஞருக்கும் இடையேயான இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பகலில் கள்ளக்காதலனுடன்.. இரவில் கணவனுடன்! திருமணமான 3 மாதங்களில் மனைவியின் மாஸ்டர் பிளான்..... பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #illegal affair #Love problem #affairs
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story