×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பகலில் கள்ளக்காதலனுடன்.. இரவில் கணவனுடன்! திருமணமான 3 மாதங்களில் மனைவியின் மாஸ்டர் பிளான்..... பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!!

பகலில் கள்ளக்காதலனுடன்.. இரவில் கணவனுடன்! மீரட்டில் அம்பலமான புதுப்பெண்ணின் இரட்டை வாழ்க்கை!

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், திருமணமான சில மாதங்களிலேயே கணவனை கொலை செய்ததாக இளம்பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் இளைஞர் ஒருவருக்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே அந்தப் பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகும் அந்த உறவைத் தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே கணவர் வேலைக்குச் சென்ற நேரங்களில் பகலில் கள்ளக்காதலனை சந்தித்துவிட்டு, இரவு நேரங்களில் கணவருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து கணவருக்கு தெரியவந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சிசிடிவி வைத்ததால் அதிருப்தி.. மாமனாரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மருமகள்!

இதையடுத்து, கணவனை கொலை செய்ய மனைவியும் அவரது கள்ளக்காதலனும் திட்டம் தீட்டியுள்ளனர். அந்த திட்டத்தின் படி கணவனை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று தாக்கி கொலை செய்ததாகவும், சம்பவத்தை இயற்கை மரணம் அல்லது வேறு காரணமாக சித்தரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில், மனைவிக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது .

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் இருவரின் பங்கு குறித்து போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்காதலை பார்த்த சிறுமி… அடுத்த நொடியே நடந்த விபரீதம்! தாய், காதலன் கைது!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UttarPradesh #Merat #illegal affair #Murder #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story