×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலை பார்த்த சிறுமி… அடுத்த நொடியே நடந்த விபரீதம்! தாய், காதலன் கைது!

கள்ளக்காதலை பார்த்த சிறுமி… அடுத்த நொடியே நடந்த விபரீதம்! தாய், காதலன் கைது!

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது தாயும் அவரது காதலனும் தகாத உறவில் இருந்ததை நேரில் பார்த்த சிறுமி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் ரோஷினி என்ற பெண், தனது கணவர் இல்லாத நேரத்தில் உதித் என்பவருடன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் எதிர்பாராத விதமாக நுழைந்த ரோஷினியின் மகள், தனது தாயும் உதித்தும் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், ரோஷினியும், உதித்தும் சிறுமியைத் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும், இதில் சிறுமி உயிரிழந்ததாகவும் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மனைவியுடன் தகாத உறவு... நள்ளிரவில் வெடித்த தகராறு! அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை கொலை செய்ததாக தாய் ரோஷினி மற்றும் உதித் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் மரணத்திற்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது மகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் இந்த சம்பவம், லக்னோ பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்காதல் ஆசையால் கணவருக்கு சமாதிகட்டிய மனைவி.. கொன்று புதைத்த பயங்கரம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affair #UttarPradesh #Lucknow #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story