₹2,000 பணத்துக்காக தகராறு... 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!
₹2,000 பணத்துக்காக தகராறு... 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பில்கிராம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயோரா கிராமத்தில், 7 மாத கர்ப்பிணியான மனைவியை கணவர் தடியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மயோரா கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி விஷால் பால் என்பவருக்கும் 24 வயதான கிரண் என்பவருக்கும் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கிரண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
சம்பவத்தன்று பணம் தொடர்பாக கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஷால் தனது மனைவியிடம் ஏற்கெனவே கொடுத்திருந்த ரூ.2,000 குறித்து கணக்கு கேட்டதாகவும், அந்தப் பணத்தை எதிர்கால குடும்பத் தேவைகளுக்காக வைத்திருக்க வேண்டும் என கிரண் கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பகலில் கள்ளக்காதலனுடன்.. இரவில் கணவனுடன்! திருமணமான 3 மாதங்களில் மனைவியின் மாஸ்டர் பிளான்..... பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!!
இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், விஷால் தடியால் கிரணை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த விஷாலின் தாய் பிரேமா, தனது மருமகளை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் விஷால் தாக்கியதாக போலீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிரணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசாரும் ஆம்புலன்ஸ் பணியாளர்களும் விரைந்து சென்றனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட கிரண், பில்கிராம் சமூக சுகாதார மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கிரணின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, தலைமறைவாக முயன்ற விஷால் பாலை போலீசார் கைது செய்தனர். 7 மாத கர்ப்பிணியான கிரண் உயிரிழந்ததுடன், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்ததாக இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிசிடிவி வைத்ததால் அதிருப்தி.. மாமனாரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மருமகள்!