×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக் கொடுமையே! கண்ணீருடன் 2 பக்கம் கடிதம் எழுதிவிட்டு... 3 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு..! அம்பலமான மாமனாரின் சதி..!!!

ஹரியானாவில் சொத்துப் பிரச்சனை காரணமாக மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாயும் உயிரிழந்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக் குறிப்பைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் முட்லானா கிராமத்தில், மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துப் பிரச்சனை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக 38 வயதான ரீமா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு வந்த கணவர் நால்வரும் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

வீட்டில் நால்வரும் உயிரிழந்து கிடந்த சோகம்

ரீமாவின் கணவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, மனைவி ரீமாவும், 11 மற்றும் 7 வயதுடைய இரு மகள்களும், 4 வயது மகனும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மகளிர் விடுதியில் 10 இளம்பெண்கள் செய்த அதிர்ச்சி செயல்! சோதனையில் சிக்கிய மாத்திரைகள், சிரிஞ்சுகள்! பகீர் சம்பவம்...!!!

தகவலறிந்து வந்த போலீஸார் நால்வரின் உடல்களையும் மீட்டு விசாரணையைத் தொடங்கினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், வீட்டில் கிடைத்த இரண்டு பக்க தற்கொலைக் குறிப்பையும் கைப்பற்றியுள்ளனர்.

சொத்துப் பிரச்சனை குறித்து தற்கொலைக் குறிப்பில் குற்றச்சாட்டு

ரீமா எழுதியதாகக் கூறப்படும் குறிப்பில், தனது மாமனார் குடும்பச் சொத்துகள் அனைத்தையும் ரிங்கு என்ற மற்றொரு மகனுக்குக் கொடுக்க விரும்புவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடையே பாகுபாடு காட்டக்கூடாது என்றும், சொத்துகள் அனைத்தும் தங்களிடம் இருந்து பறிபோனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், தனது மூத்த மைத்துனி தனக்குச் செய்வினை அல்லது பில்லி சூனியம் வைத்ததாகவும் ரீமா அந்தக் குறிப்பில் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் தற்கொலைக் குறிப்பில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலைக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு விசாரணை

குடும்பத்தில் நீண்டகாலமாகச் சொத்துப் பிரச்சனை இருந்து வந்ததா, குழந்தைகளின் உயிரிழப்புக்கு முன்பு என்ன நடந்தது, ரீமா இந்த முடிவை எடுக்க வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தனவா எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட தற்கொலைக் குறிப்பில் உள்ள தகவல்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், முட்லானா கிராமத்தில் சோகம் நிலவுகிறது.

 

இதையும் படிங்க: திடீரென வாயில் நுரை தள்ளி துடிதுடித்த இறந்து போன 3 குழந்தைகள்! நடந்தது என்ன..? பீதியில் உறைந்த கிராம மக்கள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹரியானா சம்பவம் #சோனிபட் #குடும்ப சொத்துப் பிரச்சனை #தற்கொலைக் குறிப்பு #Haryana Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story