திடீரென வாயில் நுரை தள்ளி துடிதுடித்த இறந்து போன 3 குழந்தைகள்! நடந்தது என்ன..? பீதியில் உறைந்த கிராம மக்கள்..!!!
பஞ்சாப் பெரோஸ்பூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் மூன்று பெண் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மோஹ்ரே வாலா கிராமத்தில், மூன்று பெண் குழந்தைகள் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட, 6 மாதம் முதல் 7 வயது வரையிலான மூன்று சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளின் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதையடுத்து சுகாதாரத்துறையினர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே கிராமத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு
மோஹ்ரே வாலா கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 7 வயது குஷன்சீப், ஒரு வயது குர்வீர் ஆகிய இரண்டு சகோதரிகளும் உயிரிழந்துள்ளனர். இதே கிராமத்தில் வசிக்கும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 6 மாதக் குழந்தை மன்ப்ரீத் கௌரும் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த வயசுலேயே இப்படியா..? பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்...!!!
குழந்தைகள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, வாயில் நுரை வந்ததாக குடும்பத்தினரும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர். சில நிமிடங்களிலேயே மூவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுவதால், கிராமத்தில் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
உடற்கூறாய்வு அறிக்கைக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
உயிரிழந்த மூன்று குழந்தைகளின் உடல்களும் பெரோஸ்பூர் சிவில் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷம், உணவு நச்சுத்தன்மை அல்லது தொற்று பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
வீடு வீடாகச் சென்று சுகாதாரத்துறையினர் ஆய்வு
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத்துறை அதிகாரி யுவராஜ் சிங் தலைமையிலான மருத்துவக் குழு மோஹ்ரே வாலா கிராமத்திற்குச் சென்றுள்ளது. அங்கு வீடு வீடாகச் சென்று குழந்தைகளின் உடல்நிலை, குடும்பத்தினரின் உடல்நலம் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
மேலும், கிராமத்தில் பயன்படுத்தப்படும் குடிநீர், உணவுப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகளையும் பரிசோதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆய்வு முடிவுகள் மற்றும் உடற்கூறாய்வு அறிக்கை வெளியான பிறகே மூன்று குழந்தைகளின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்.
இதையும் படிங்க: ஐயோ... புள்ளைய பத்தியாவது யோசிச்சு இருக்கலாமே! வேலைக்கு சென்ற கணவர்! 18-வது மாடியில் இருந்து குதித்த தாயும் 6 வயது மகனும்...! பகீர் சம்பவம்..!!!