×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐயோ... புள்ளைய பத்தியாவது யோசிச்சு இருக்கலாமே! வேலைக்கு சென்ற கணவர்! 18-வது மாடியில் இருந்து குதித்த தாயும் 6 வயது மகனும்...! பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிராவின் புனேவில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 18-வது மாடியில் இருந்து விழுந்து 33 வயது பெண்ணும் அவரது 6 வயது மகனும் உயிரிழந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 18-வது மாடியில் இருந்து விழுந்து 33 வயது பெண்ணும் அவரது 6 வயது மகனும் உயிரிழந்தனர். கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வாகாட் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

18-வது மாடியில் இருந்து விழுந்த தாய், மகன்

ராஜஸ்தானைச் சேர்ந்த ஏக்தா பாங்டே (33), தனது கணவர் மற்றும் மகன் மாதவ் பாங்டே (6) ஆகியோருடன் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: மொத்த குடும்பமும் போச்சு... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு! அதிரவைக்கும் காரணம்... நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!!!

சம்பவத்தன்று அவரது கணவர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், மாலை நேரத்தில் குடியிருப்புப் பகுதியில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தவர்கள், ஏக்தாவும் அவரது மகனும் கீழே விழுந்து உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வாகாட் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில், ஏக்தா தனது மகனுடன் மின்தூக்கி மூலம் 18-வது மாடிக்குச் சென்றது பதிவாகியுள்ளது. ஆனால், அவர்கள் கீழே விழுந்ததற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

காரணம் குறித்து போலீசார் விசாரணை

குடும்பப் பிரச்சினை அல்லது தனிப்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் முடிவில்தான் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: நா சொல்றத மட்டும் கேளு டி... ஹோட்டல் அறையில் கத்தி காட்டி வாலிபரால் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்! பகீர் சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#புனே தாய் மகன் உயிரிழப்பு #18வது மாடி சம்பவம் #Pune news #Pimpri Chinchwad #Wakad Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story