×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நா சொல்றத மட்டும் கேளு டி... ஹோட்டல் அறையில் கத்தி காட்டி வாலிபரால் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்! பகீர் சம்பவம்...!!!

பீகார் பெகுசராயில் உள்ள ஹோட்டலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் உள்ள ஹோட்டலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அண்டை வீட்டைச் சேர்ந்த விக்ரம் சாஹ்னி என்பவர் அந்தப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, பின்னர் ஹோட்டல் அறையில் ரோஹித் குமார் சாஹ்னியும் விக்ரமும் சேர்ந்து அவரைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

பெகுசராய் பகுதியில் உள்ள NH31 சாலையில் அமைந்துள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு அந்தப் பெண்ணை விக்ரம் சாஹ்னி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ரோஹித் குமார் சாஹ்னி ஏற்கெனவே காத்திருந்துள்ளார். ஹோட்டல் அறைக்குள் சென்றதும், ரோஹித் அந்தப் பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தலைமுடியைப் பிடித்து செருப்பால் தாக்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சி! பள்ளி வகுப்பறையில் 6 வயது சிறுமியை.. ரத்தம் சொட்ட சொட்ட கொடூரமாக தாக்கிய 8 வயது சிறுவன்..!

மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். இருவரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பகவான்பூர் காவல் நிலையத்தில் ரோஹித் குமார் சாஹ்னி மற்றும் விக்ரம் சாஹ்னி ஆகிய இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரையும் பிடிக்க போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஹோட்டலில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

இதையும் படிங்க: ஐயோ.... பூஜைக்கு பூ பறிக்கப் போன 11 வயது சிறுவன்! 23வது மாடி பால்கேனில் கேட்ட அலறல் சத்தம்... மகனைக் காப்பாற்ற போன தந்தைக்கும் நேர்ந்த விபரீதம்! நொடியில் நொறுங்கிய குடும்பம்... பகீர் சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெகுசராய் பாலியல் வன்கொடுமை #பெண்களுக்கு எதிரான குற்றம் #Begusarai Crime #Bihar police #Hotel Assault Case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story