வேலை முடிந்து வீடு திரும்பிய மனைவி கண்ட அதிர்ச்சி! தந்தை செய்த கொடூரம்... கதறிய தாய் ! புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுக்க உத்தரவு..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கி, குழந்தையைக் கொலை செய்ததாகக் கணவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கியதுடன், சொந்தக் குழந்தையையும் கொலை செய்ததாக கணவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி, குழந்தை உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி நாளில் கணவன் - மனைவி இடையே தகராறு
காசியாபாத்தைச் சேர்ந்த அபிஷேக் - பிரியங்கா தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருந்துள்ளது. அபிஷேக் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், பிரியங்கா வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது
இதையும் படிங்க: வாக்குவாதம் வன்முறையாகி சமையலறையில் நடந்த கத்திகுத்து..! ரத்த வெள்ளத்தில் சரிந்த 30 வயது பெண்.. கணவனின் வெறிச்செயல்..!!!
இந்நிலையில், தீபாவளி பண்டிகையன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அபிஷேக், மனைவி பிரியங்காவைத் தாக்கியதுடன், குழந்தையையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேலை முடிந்து வந்தபோது குழந்தை உயிரிழந்திருந்தது
நவம்பர் 9ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பிரியங்கா, தனது மகன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, குழந்தையின் மரணம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அபிஷேக்கைக் கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய முடிவு
இதற்கிடையே, குழந்தையின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தாய் பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அபிஷேக் தனது மகனுடன் இருக்கும் புகைப்படமும், குழந்தையை இழந்த தாய் பிரியங்கா வேதனையுடன் பேசும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே குழந்தையின் மரணம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவரும்.