×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாடகை வீட்டில் தாய், காதலியுடன் தங்கியிருந்த சாப்ட்வேர் இன்ஜினியர்! இரவு திடீரென வந்த தகராறில் பாய்ந்த கத்தி..... அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பகீர் பின்னணி...!!!

கொல்கத்தாவில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காதலியும் அவரது தாயும் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

Advertisement

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், காதலியுடன் ஏற்பட்ட தகராறில் 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கரியா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் சனிக்கிழமை இரவு இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காதலியையும் அவரது தாயையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்குவாதம் முற்றியதில் கத்திக்குத்து

கொல்கத்தாவின் கரியா பகுதியைச் சேர்ந்த ஃபர்தாபாத்தில் உள்ள வாடகை வீட்டில் சார்த்தக் சர்க்கார் (25) என்பவர் தனது காதலி சஞ்சலிகா மற்றும் அவரது தாயார் மவுமிதாவுடன் தங்கி வந்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த சார்த்தக்கிற்கும் சஞ்சலிகாவுக்கும் இடையே சனிக்கிழமை இரவு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உண்மை தெரியாமல் 5 நாளாக உளறிய 10 வயது மகன்! காரில் வீசிய துர்நாற்றம்... மலையில் வீசப்பட்ட 6 பேர் மூட்டை! சிறுவனை மிரட்டி அனுப்பிய ஆடியோ.... நடுக்க வைக்கும் பின்னணி உண்மை..!!!

தகராறு தொடர்ந்து முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சஞ்சலிகா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சார்த்தக்கின் தோள்பட்டையில் குத்தியுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்து அலறியுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் உயிர் பிரிந்தது

சார்த்தக்கின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டுக்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காதலியும் தாயும் கைது

இதையடுத்து, கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சஞ்சலிகாவைக் கைது செய்தனர். மேலும், மோதலில் அவரது தாயார் மவுமிதாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரையும் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான முழுமையான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அடக்கொடுமையே... கல்லூரிக்குச் சென்ற மாணவன் திடீர் மாயம்! 23 ஆண்டுகளுக்கு பின்... நடமாடும் பிணமாக வீடு திரும்பிய கொடூரம்.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கொல்கத்தா கொலை #சாப்ட்வேர் இன்ஜினியர் #காதலி கைது #Kolkata Murder #West Bengal crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story