உண்மை தெரியாமல் 5 நாளாக உளறிய 10 வயது மகன்! காரில் வீசிய துர்நாற்றம்... மலையில் வீசப்பட்ட 6 பேர் மூட்டை! சிறுவனை மிரட்டி அனுப்பிய ஆடியோ.... நடுக்க வைக்கும் பின்னணி உண்மை..!!!
பெங்களூருவில் தம்பதியைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட இந்துசேகர், உண்மையை மறைக்க அவர்களின் 10 வயது மகனைப் பயன்படுத்தியதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சங்கர், நளினி தம்பதியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தம்பதியைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட இந்துசேகர், உண்மையை மறைக்க அவர்களின் 10 வயது மகனையே பயன்படுத்தியுள்ளார். பெற்றோர் உயிரிழந்தது தெரியாமல், ஐந்து நாட்களாக சிறுவன் கூறிய பொய்யான தகவல்களால் உறவினர்கள் குழப்பத்தில் இருந்துள்ளனர்.
பெற்றோர் ஆன்மிகப் பயணத்தில் இருப்பதாகச் சிறுவனிடம் பொய்
சங்கர், நளினி தம்பதியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்துசேகர், அவர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட அன்று மாலையே சிறுவனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். பெற்றோர் ஆன்மிகப் பயணத்துக்குச் சென்றுள்ளதாகக் கூறி, சிறுவனைத் தனது காரில் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: குளியலறையில் தவறி விழுந்து மாரடைப்பு வந்துட்டு...! கதறி அழுத மனைவி.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி! பகீர் சம்பவம்...!!!
உறவினர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க, பெற்றோரின் செல்போன்கள் மூலம் குரல் பதிவுகளை அனுப்பவும் சிறுவனை அவர் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முதலில் பெற்றோர் கோயிலுக்குச் சென்றிருப்பதாகவும், பின்னர் வட இந்தியாவில் மூன்று மாத சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் சிறுவனைப் பேச வைத்துள்ளார். யாரும் அவர்களைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் தகவல் தெரிவிக்கச் செய்துள்ளார்.
சாக்கு மூட்டைகளில் சடலங்களை எடுத்துச் சென்றதாக வாக்குமூலம்
காரில் துர்நாற்றம் வீசிய சாக்கு மூட்டைகளில் தம்பதியரின் உடல்களை மறைத்து எடுத்துச் சென்றதாகவும், பின்னர் நந்தி மலைப் பகுதியில் வீசியதாகவும் சிறுவனின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. இந்த விவரங்கள் வழக்கின் விசாரணையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆறு குடும்ப உறுப்பினர்களைக் கொன்றாரா?
இந்த இரட்டைக் கொலை வழக்கைத் தொடர்ந்து, இந்துசேகர் மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் எழுந்துள்ளது. தனது மனைவி உட்பட மொத்தம் ஆறு குடும்ப உறுப்பினர்களைக் கொன்று, அவர்களின் உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். காணாமல் போனவர்களின் செல்போன் சமிக்ஞைகளை ஆய்வு செய்த போலீசார், அதன் அடிப்படையில் இந்துசேகரைக் கைது செய்துள்ளனர்.
தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோரின் மரணத்தை அறியாமல் ஐந்து நாட்களாகப் பொய்யான தகவல்களைச் சொல்ல வைக்கப்பட்ட 10 வயது சிறுவன் போலீசாரின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மேலும் என்னென்ன உண்மைகள் வெளியாகும் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... கல்லூரிக்குச் சென்ற மாணவன் திடீர் மாயம்! 23 ஆண்டுகளுக்கு பின்... நடமாடும் பிணமாக வீடு திரும்பிய கொடூரம்.!!!