×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குளியலறையில் தவறி விழுந்து மாரடைப்பு வந்துட்டு...! கதறி அழுத மனைவி.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி! பகீர் சம்பவம்...!!!

பெங்களூருவில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்தத வழக்கில் இருவரையும் கைது செய்த போலீசார், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

பெங்களூருவில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டதோகுரு பகுதியில் நடந்த இந்தக் கொலை, முதலில் இயற்கைக்கு மாறான மரணம் எனப் பதிவு செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கள்ளக்காதலைக் கண்டித்த கணவர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தொட்டதோகுரு பகுதியில் உபேந்திரா என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அனிதாவுக்கும் மதுசூதன் ரெட்டி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை அறிந்த உபேந்திரா, இருவரையும் கண்டித்து எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: அம்மா எந்திரிம்மா...! பயமா இருக்கு..! தூக்கில் தொங்கிய தாய்... கால்களை பிடித்து இரவு முழுவதும் கதறி அழுத குழந்தை! விடிந்ததும் போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி...!!!

இதனால் ஆத்திரமடைந்த அனிதாவும் மதுசூதனும் உபேந்திராவைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தூக்கத்தில் இருந்தபோது கழுத்தை நெரித்துக் கொலை

கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை வீட்டில் உபேந்திரா தூங்கிக் கொண்டிருந்தபோது, மதுசூதன் அவரது கழுத்தை நெரித்ததாகவும், அனிதா மூக்கு மற்றும் வாயைப் பொத்தி மூச்சுவிட முடியாமல் செய்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

கொலைக்குப் பிறகு, உபேந்திரா குளியலறைக்குச் சென்றபோது தவறி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாகக் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதன் மூலம் கொலையை மறைக்க இருவரும் முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையால் அம்பலம்

உபேந்திராவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கள்ளக்காதல் விவகாரமும், கொலைத் திட்டமும் வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து அனிதா மற்றும் மதுசூதன் ரெட்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: தீபாவளி நாளில் மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை! உடனே தடியால் அடித்துக் கொன்ற கணவன்... பகீர் சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெங்களூரு கொலை #கள்ளக்காதல் #Bengaluru murder #கணவர் கொலை #Karnataka crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story