வாக்குவாதம் வன்முறையாகி சமையலறையில் நடந்த கத்திகுத்து..! ரத்த வெள்ளத்தில் சரிந்த 30 வயது பெண்.. கணவனின் வெறிச்செயல்..!!!
கேரளாவின் வர்க்கலா அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் வர்க்கலா அருகே குடும்பத் தகராறில் 30 வயது பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். செம்மருதி பகுதியில் நேற்று பிற்பகல் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக கணவர் ஷாஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுத்தில் கத்தியால் குத்தியதால் கணவர் மீது குற்றச்சாட்டு
செம்மருதியைச் சேர்ந்த சுபினா (30) என்பவருக்கும் அவரது கணவர் ஷாஜன் (39) என்பவருக்கும் இடையே நேற்று பிற்பகல் 3 மணியளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஷாஜன் சமையலறையில் இருந்த கத்தியால் சுபினாவின் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் வீட்டுக்குள்ளேயே சரிந்து விழுந்தார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் ஏற்பட்ட குடும்பச் சண்டை! மனைவி சொன்ன ஒத்த வார்த்தை... பீர் பாட்டிலால் துடிதுடிக்க கொன்ற கொடூரக் கணவன்..! பகீர் சம்பவம்..!!!
உடனடியாக சுபினாவை மீட்டு வர்க்கலா தாலுகா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தத் தம்பதிக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது.
ஏற்கனவே கணவர் மீது போலீசில் புகார்
சுபினாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆயிரூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து ஷாஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், கணவர் தொடர்ந்து துன்புறுத்துவதாகக் கூறி சுபினா ஏற்கனவே பலமுறை ஆயிரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார்கள் தொடர்பான விவரங்களையும், தம்பதியருக்கு இடையே நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினைகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
உறவினர்கள், அண்டை வீட்டாரிடம் விசாரணை
கொலைக்கான பின்னணி குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அம்மாவா இது..? என்ன நடந்தது என்பதை பார்க்காமல் சண்டைக்கு போன தாய்... அடுத்து நடந்த அதிர்ச்சி! ஷாக் வீடியோ...!!!