×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிகார மகனின் கொடுமை.. பெற்றோர், சகோதரன் சேர்ந்து செய்த கொடூர சம்பவம்!

குடிகார மகனின் கொடுமை.. பெற்றோர், சகோதரன் சேர்ந்து செய்த கொடூர சம்பவம்!

Advertisement

மகாராஷ்டிர மாநிலம் மாநிலத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் தொல்லை தாங்க முடியாமல், பெற்ற தாயும், தந்தையும், சகோதரனும் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டது போல நாடகமாடியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டம் மொஹாடி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான அந்த இளைஞர், தொடர்ந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்ததாகவும், அவரால் குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சம்பவம் தற்கொலை என முதலில் கருதப்பட்டது. ஆனால், போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்.. 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.! 

இதனை தொடர்ந்து குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிச்சத்திற்கு தெரியவந்தது. அதன்படி, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மகனின் குடிப்பழக்கம் மற்றும் அவர் கொடுத்ததாக கூறப்படும் தொல்லைகளை தாங்க முடியாமல், அவரது பெற்றோரும் சகோதரரும் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு மற்றும் குடிப்பழக்கம் காரணமாக சொந்த மகனையே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 22 வயது இளைஞரின் செல்போனில் 600 ஆ., படம்.. சிறுவர்கள், இளைஞர்களை மிரட்டி வன்கொடுமை.. திடுக் சம்பவம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #drunk man #murder case #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story