×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்.. 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.! 

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  

Advertisement

சமூக வலைத்தளத்தில் கிடைத்த பழக்கத்தால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விபரீதத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

இன்ஸ்டாகிராம்: 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: 22 வயது இளைஞரின் செல்போனில் 600 ஆ., படம்.. சிறுவர்கள், இளைஞர்களை மிரட்டி வன்கொடுமை.. திடுக் சம்பவம்.! 

சாட்டிங்: 

இவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் பேசி வந்த நிலையில், கடந்த 11 ம் தேதி சிறுவன் சிறுமியிடம் தனியாக சந்தித்து பேசலாம் என ஆசைவார்த்தை கூறி இருக்கிறார். காதலனின் அழைப்பின் பேரில் சிறுமியும் நேரில் சென்றுள்ளார். 

பலாத்காரம்: 

சிறுமியாக தயாராக கூட்டாளியுடன் காத்திருந்த சிறுவன், அங்குள்ள மறைவான பகுதிக்கு சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். 

வீடியோ: 

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதாகவும் கூறப்படும் நிலையில், சிறுமியின் உறவினர் ஒருவருக்கு இதுதொடர்பான தகவல் கிடைத்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின் இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது அவர் அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளார். 

கைது: 

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் சிறார்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 

இதையும் படிங்க: கர்ப்பிணி பெண் பாலியல் வன்கொடுமை.. ஓடும் ரயிலில் கொடூரம்..! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #maharashtra #14 year old Girl #instagram love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story