×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உட்கார்ந்து இருந்தா ஜோலி முடிந்திருக்கும்...! கழிப்பறை கோமோடிற்குள் கேட்ட உஷ் உஷ் சத்தம்! திறந்து பார்த்த போது சுருண்டு கிடந்த ராட்சத கருநாகம்...! ஷாக் வீடியோ...!!!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் வீட்டுக் கழிப்பறை கோமோடிற்குள் பதுங்கியிருந்த விஷத்தன்மை கொண்ட கருநாகம் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. வறட்சி காரணமாக பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறை கோமோடிற்குள் விஷத்தன்மை கொண்ட கருநாகப் பாம்பு பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நவம்பர் 1ஆம் தேதி இரவு நடந்த இந்தச் சம்பவத்தால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினர், பாம்பை பாதுகாப்பாக மீட்டனர்.

கோமோடிற்குள் சுருண்டு கிடந்த கருநாகம்

அகோலா மாவட்டம் சுதிர் காலனியில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்தச் சென்றபோது, கோமோடிற்குள் கருநாகம் சுருண்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 3 வயது சிறுமிக்கு சகோதரனுடன் விளையாடும்போது நேர்ந்த விபரீதம்! இறுதியில் நடந்த அந்த ஒரு அதிசயம்..!!!

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த அமைப்பின் அதிகாரி பாலா கல்னே, மிகுந்த எச்சரிக்கையுடன் பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டார். பிளாஸ்டிக் குழாயைப் பயன்படுத்தி கோமோடிற்குள் பதுங்கியிருந்த கருநாகத்தை பத்திரமாக வெளியே எடுத்தார். பின்னர் அந்தப் பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

வறட்சியால் குடியிருப்புகளை நோக்கி வரும் பாம்புகள்

அகோலா பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பாம்புகள் தண்ணீரையும் பாதுகாப்பான புகலிடத்தையும் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதாக அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். இதனால் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

 

 

இதையும் படிங்க: கணவர் வீட்டில் உயிரிழந்து கிடந்த 29 வயது இளம்பெண்..! பின்னணியில் வெளிவந்த அதிரவைக்கும் காரணம்.. பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அகோலா கருநாகம் #பாம்பு மீட்பு #Akola Cobra Rescue #Snake Rescue #மகாராஷ்டிரா வறட்சி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story