3 வயது சிறுமிக்கு சகோதரனுடன் விளையாடும்போது நேர்ந்த விபரீதம்! இறுதியில் நடந்த அந்த ஒரு அதிசயம்..!!!
அகமதாபாத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியின் நெஞ்சில் கத்தரிக்கோல் குத்தியது. ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியின் நெஞ்சில் கத்தரிக்கோல் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆழமாகச் சிக்கிய கத்தரிக்கோலுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து, சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சகோதரருடன் விளையாடியபோது நேர்ந்த விபத்து
கட்ச் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் தம்பதியின் 3 வயது மகள், கடந்த மாதம் காலை 11 மணியளவில் தனது 5 வயது சகோதரருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கத்தரிக்கோல் சிறுமியின் மார்புப் பகுதியில் குத்தி ஆழமாகச் சிக்கியது. இதில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.
இதையும் படிங்க: வாக்குவாதம் வன்முறையாகி சமையலறையில் நடந்த கத்திகுத்து..! ரத்த வெள்ளத்தில் சரிந்த 30 வயது பெண்.. கணவனின் வெறிச்செயல்..!!!
உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். பின்னர் காந்திதாமில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. காயத்தின் தீவிரம் தெரியவந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவசர அறுவை சிகிச்சையில் கத்தரிக்கோல் அகற்றம்
அன்றிரவு சுமார் 10 மணிக்கு சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ராகேஷ் ஜோஷி தலைமையில், மருத்துவர்கள் காஷ்வி, மிருணாளினி மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இந்தச் சிகிச்சையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு சிறுமியின் நெஞ்சில் சிக்கியிருந்த கத்தரிக்கோலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படாமல் குழந்தை காப்பாற்றபட்டது.
உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவர்கள் அறிவுரை
தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கத்தரிக்கோல் வேறு திசையில் அல்லது சற்று உயரமான பகுதியில் குத்தியிருந்தால் முக்கிய ரத்த நாளங்கள், மூச்சுக்குழாய் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தைகள் விளையாடும் இடங்களில் கத்தரிக்கோல், கத்தி உள்ளிட்ட கூர்மையான பொருட்களை எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர். விபத்துக்குப் பிறகு குழந்தைக்கு மூச்சுத் திணறல் அல்லது வேறு பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: அம்மாவா இது..? என்ன நடந்தது என்பதை பார்க்காமல் சண்டைக்கு போன தாய்... அடுத்து நடந்த அதிர்ச்சி! ஷாக் வீடியோ...!!!