பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவியிடம் சைக்கிளில் வந்து அத்துமீறிய வாலிபர்! பயந்து ஓடாமல் பதிலுக்கு பதில் பளார் விட்ட மாணவி... வைரலாகும் வீடியோ..!!!
உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கரில் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவியிடம் அநாகரீகமாக நடந்த நபருக்கு மாணவி துணிச்சலாக பதிலடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில், பயிற்சி வகுப்பிற்கு தனியாக சென்றுகொண்டிருந்த மாணவியிடம் அநாகரீகமாக நடந்ததாக கூறப்படும் நபருக்கு அவர் பொதுமக்கள் முன்னிலையில் பதிலடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கவனம் ஈர்த்துள்ளன. தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழிமறித்த நபருக்கு மாணவியின் துணிச்சலான பதில்
ஆசம்கர் மாவட்டத்தின் தேவ்கான் கோட்வாலி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தகவலின்படி, பயிற்சி வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்த மாணவியை சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்துள்ளார். பின்னர் அவர் மாணவியிடம் ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பயந்து விலகிச் செல்லாமல், உடனடியாக எதிர்த்து குரல் எழுப்பினார். அதன்பின் அந்த நபரை நோக்கி சென்று, பொதுமக்கள் முன்னிலையிலேயே பலமுறை கன்னத்தில் அறைந்தார். மாணவியின் இந்த துணிச்சலான நடவடிக்கை அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
வழிப்போக்கர்கள் தலையீடு
மாணவியின் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அவர்கள் அந்த நபரைக் கண்டித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து மாணவி அழுதபடியே தனக்கு நடந்ததை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வைரலான வீடியோ
சம்பவம் தொடர்பான வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டது. இதையடுத்து போலீசார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி (CO) பூபேஷ் குமார் பாண்டே கூறுகையில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மாணவியின் குடும்பத்தாரிடம் இருந்து புகார் பெறப்பட்டு, தலைமறைவாக உள்ள நபரை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் பொண்டாட்டி அடிச்சா தப்பு இல்ல.... ஆனால் புருஷன் அடுச்சா தப்பா? அடி தாங்க முடியாமல் கதறி அழுத கணவன்! அதிர்ச்சி வீடியோ..!!!