×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவி.. 4 மாணவிகளை ஏவி தாக்கிய வாலிபர்? ராய்பூரில் அதிர்ச்சி!

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவி.. 4 மாணவிகளை ஏவி தாக்கிய வாலிபர்? ராய்பூரில் அதிர்ச்சி!

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், தன்னைத் தவறான நோக்கத்துடன் அணுகிய வாலிபரின் விருப்பத்திற்கு பள்ளி மாணவி ஒருவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தனது தோழிகளான 4 மாணவிகள் மூலம் அந்த மாணவியைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த 4 மாணவிகளும் பாதிக்கப்பட்ட மாணவியை பேச்சுவார்த்தை என்ற பெயரில் யாரும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைச் சுற்றிவளைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

மேலும், தாக்குதலின்போது சம்பந்தப்பட்ட வாலிபருக்கு வீடியோ கால் செய்த மாணவிகள், பாதிக்கப்பட்ட மாணவியை அவரிடம் மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த அவர்கள், அந்தக் காணொளியை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்க முடியாத விரக்தி.. போனை உடைத்து விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!

அந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 மாணவிகள் மற்றும் சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 3 குழந்தைகளின் தாய்... 13 வயது இளைய இளைஞருடன் காதல்! வீட்டில் சிக்கியதால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Raipur #Satiskar #Love problem #attack
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story