இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்க முடியாத விரக்தி.. போனை உடைத்து விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!
இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்க முடியாத விரக்தி.. போனை உடைத்து விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!
சத்தீஸ்கரில் செல்போனில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்க்க முடியாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் கேரகச்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் மங்லோ பாய் (52). இவருக்கு செல்போனில் சமூக வலைதளங்களில் வெளியாகும் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களைப் பார்ப்பது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் தனது செல்போனில் ரீல்ஸ் வீடியோக்களை மங்லோ பாய் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் நெட்வொர்க் இணைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இணைய சேவை அடிக்கடி துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் வீடியோக்கள் பாதியிலேயே நின்று, தொடர்ந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலிகாலம்.... 2 குழந்தைகளின் தாயும் 18 வயது இளம்பெண்ணும் செய்த காதல் திருமணம்! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!!!
இதனால் ஆத்திரமடைந்த மங்லோ பாய், தனது செல்போனை தரையில் வீசி உடைத்ததாக கூறப்படுகிறது. செல்போன் உடைந்ததுடன், ரீல்ஸ் வீடியோக்களையும் தொடர்ந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது தற்கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவை மோசமாக சித்தரிக்கும் AI வீடியோக்கள்! அதற்கு அமெரிக்க பெண் கொடுத்த தரமான பதிலடி....!!!