×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யோசிக்கும் திறன் அதிகரிக்க வேண்டுமா.? இந்த யோகா செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்.!

யோசிக்கும் திறன் அதிகரிக்க வேண்டுமா.? இந்த யோகா செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்.!

Advertisement

யோகா நம்முடைய நாட்டின் பாரம்பரியமாக இருக்கிறது. இந்த யோகா நம்முடைய உடலையும், மனதையும் ஆரோக்கியத்தோடு வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாக உள்ளது. நம்முடைய உடலை வலுவாக வைப்பதற்கும் யோகா பயிற்சிகள் இருக்கிறது. அதேபோன்று, மூளையின் திறனை அதிகரிப்பதற்கான யோகா முறைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹலாசன யோகாவை செய்வதன் மூலமாக, மனதின் சக்தி அதிகரிக்கும், சிந்தனைத் திறன் கூடும். இந்த ஆசனத்தை செய்வதால்,தலைகீழாக கவிழ்ந்து, கலப்பை போன்று நம்முடைய உடலை நீட்டமுடியும். பஸ்சிமோத்தனாசனம் என்ற ஆசனத்தை செய்வதன் மூலமாக, மூளைக்கான இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.  இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்பக்கமாக நகர்ந்து கால்களை தொட வேண்டும்.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம் என்ற ஆசனத்தை செய்வதன் மூலமாக, மூளையின் ஞாபக சக்தி அதிகரிக்கும். பிராணயாம யோகா பயிற்சி செய்வதன் மூலமாக, மன அமைதி ஏற்படும். இந்த பயிற்சியை செய்வதற்கு மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும். வஜ்ராசனம் என்ற யோகாவை செய்வதால், நம்முடைய உடலை ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லலாம். அத்தோடு, இந்த யோகா தசைகளை இலகுவாக்க உதவுகிறது. பத்மாசனம் என்ற யோகாவை செய்வதன் மூலம் உடலில் இருக்கின்ற சக்கரங்கள் தூண்டப்படுவதோடு, மூளைக்கு அமைதியான சூழ்நிலையை உண்டாக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yoga #health tips #Tamil Health Tips #Health tips in tamil #Health tips for memory power
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story