×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாங்க முடியாத கொசுத்தொல்லை.. தப்பிக்க எளிமையான வழிகள் இதோ.!

தாங்க முடியாத கொசுத்தொல்லை.. தப்பிக்க எளிமையான வழிகள் இதோ.!

Advertisement

டெங்கு காய்ச்சல் கொசுக்களால் பரவும் வைரஸ் காய்ச்சல் ஆகும். இந்த டெங்குக் காய்ச்சலை எலும்பு முறிவுக் காய்ச்சல் அல்லது முடக்குக் காய்ச்சல் என்றும் கூறுவார்கள். அதாவது, இந்த காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு எலும்பு பலவீனமாகி, முடக்கி போட்டது போல் உணர்வு உண்டாகும், இதனால் அவ்வாறு அழைக்கின்றனர்.

இந்த காய்ச்சலை உண்டாகும் கொசுவின் வகை ஏடிஸ் எஜிப்தி (Aedes aegypti). கொசுக்களால் பலவிதமான மிக ஆபத்தான நோய்களான டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, மஞ்சள் காமாலை முதலியவை பரவுகின்றன. பெண் கொசுக்கள் தன் இனத்தைப் பெருக்க, முட்டையிடுவதற்குத் தேவையான புரத சத்தினை பெறுவதற்காக மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. 

கொசுக்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விதமான நோய்களால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நம் வீட்டிலும், வீட்டை சுற்றியுள்ள இடங்களிலும் கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டுமெனில் சில முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: பெண்களுக்கு ஆண்களை விட அதிகம் பாதிக்கும் இதய நோய்! கட்டாயம் இதை செய்யுங்க! புதிய ஆய்வு எச்சரிக்கை...

அதாவது, கொசுக்கள் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களிலே தான் தங்கள் முட்டைகளை இடுகின்றன. எனவே, நம் வீட்டை சுற்றி நீர் தேங்காதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். காலி இடங்களில் நீர் தேங்கினால் மண்இட்டு மூடவேண்டும். பிளாஸ்டிக் குடம், பானைகள் முதலியவற்றை மூடி கொண்டு முடி பயன்படுத்தவேண்டும். 

வீட்டின் மூலைகளில் தேவையற்ற பொருள்களை நீக்கி, சுத்தமாக வைத்திருக்கவேண்டும். நாம் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டிகளை அடிக்கடி  நன்றாக கிருமி நாசினி சேர்த்து, சுத்தம் செய்து, அதில் கொசு முட்டைகள் உருவாகாமல் கவனித்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் வீட்டில் கட்டாயம் கொசு வலையுடன் கூடிய கதவு, ஜன்னல் அமைத்தால் கொசுக்களின் கடியிலிருந்து நிச்சயம் பாதுகாப்பு கிடைக்கும்.

எந்த பக்கவிளைவுகளையம் ஏற்படுத்தாத இயற்கை முறையிலான கொசு விரட்டிகளை பயன்படுத்தவேண்டும். துளசி, புதினா, சாமந்தி, லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி போன்ற செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை நம் வீட்டின் அருகில் அண்டவிடாமல் விரட்டலாம். 

பூண்டின் வாசனைக்கு கொசுக்கள் வராது,எனவே பூண்டினை உடைத்து அங்கங்கு வைத்தோமெனில் கொசுக்கள் வராது. மஞ்சள்,தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் ஏதெனும் ஒன்றை நம் உடம்பில் பூசிக்கொண்டால் கொசுக்கள் உடலின் அருகில் நெருங்காது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு வைரஸ் பரவல்.. வைரஸின் அறிகுறிகள் என்ன?.. எதிர்கொள்வது எப்படி?.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mosquito #Home #Dengue fever
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story