×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்களுக்கு ஆண்களை விட அதிகம் பாதிக்கும் இதய நோய்! கட்டாயம் இதை செய்யுங்க! புதிய ஆய்வு எச்சரிக்கை...

ஆண்களை விட பெண்களுக்கு இதய நோய் அதிகமாக உள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது. உடல்நல பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முக்கியம் என வலியுறுத்தப்படுகிறது.

Advertisement

நவீன வாழ்க்கை முறைகள் மற்றும் வேலைப்பளு காரணமாக மக்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்கள் அதிகரித்து வருகின்றன.

ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படுபவர்கள்

புதிய ஆய்வு ஒன்றில், ஆண்களை விட பெண்களுக்கு இதய நோய்கள் அதிகம் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, 35 முதல் 54 வயதுக்கிடையே உள்ள பெண்களில் மாரடைப்புச் சிகிச்சை பெறும் எண்ணிக்கை கடந்த 20 வருடங்களில் 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தாமதம் செய்யும் பெண்கள்

பொதுவாக, அறிகுறிகள் தோன்றிய பின்பு மருத்துவமனைக்கு செல்லும் எண்ணத்தில் பெண்கள் தாமதம் செய்வது கவலைக்குரியது. இதனால், அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களே காய்ச்சலா? அலட்சியம் வேண்டாம்.. தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!

அறிவுரை மற்றும் விழிப்புணர்வு

பெண்கள் ஆண்டுதோறும் கட்டாயம் உடல்நல பரிசோதனைகள் செய்ய வேண்டும். மருத்துவ விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அறிகுறிகள் ஏற்பட்டவுடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆரம்பத்தில் கண்டறிதல் முக்கியம்

இது போன்ற ஆபத்தான நோய்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், மிகப்பெரிய பாதிப்புகளை தவிர்க்க முடியும். எனவே, பெண்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

 

இதையும் படிங்க: வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! மருத்துவ நிபுணர்களின் விளக்கம் ! இந்த அறிகுறிகள் தென்பட்டால் அசால்ட்டாக இருக்காதீங்க...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெண்கள் heart disease #இதய நோய் #Women health Tamil #மாரடைப்பு அறிகுறிகள் #Medical awareness Tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story