கழிவறைக்குள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் நபரா நீங்கள்? உங்களுக்குத்தான் முக்கிய எச்சரிக்கை.!
Bathroom Phone Habit: உங்களின் அன்றாட பழக்கத்தால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆபத்தான நச்சுக்கிருமிகள் கழிவறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது நமது செல்போனில் ஒட்டிக்கொள்ளும். பின் அதனை நாம் பயன்படுத்தும்போது நமக்கு உபாதைகள் ஏற்படலாம்.
ஸ்மார்ட்போன்:
Using Your Phone in the Bathroom?: நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஸ்மார்ட்போன் & மனிதர்களை பிரிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. காலையில் தொடங்கி இரவு வரை கைகளில் ஸ்மார்ட்போன் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. தவழும் குழந்தை முதல் தாத்தா-பாட்டி வரை அனைவரும் தற்போது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகின்றனர். ஒருசிலர் பல்வேறு காரணங்களை கூறி ஸ்மார்ட்போனை கழிவறைக்குச் எடுத்துச் செல்கிறார்கள்.
இதையும் படிங்க: லேப்டாப் தீப்பிடித்து வெடிக்கும் அபாயம்.. இந்த தவறை செய்யாதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!
எச்சரிக்கை:
இவ்வாறான பழக்கம் பொழுதுபோக்காக தெரிந்தாலும் பல கேடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் ஸ்மார்ட்போனை பயன்படுத்திவிட்டு அடிக்கடி தூய்மை படுத்துவதில்லை. இதனால் ஸ்மார்ட்போன் கிருமிகளின் கூடாரமாக இருக்கும். அதனை கழிவறைக்குள் எடுத்துச் சென்றால் கண்களுக்கு தெரியாத காற்றில் மிதக்கும் நுண் கிருமிகள், பாக்டீரியாக்கள் ஸ்மார்ட்போன் திரையில் ஒட்டிக்கொள்ளும்.
ஆபத்து அதிகம்:
ஆய்வு ஒன்றில் கழிவறையில் இருப்பதை விட ஸ்மார்ட்போனில் 10% அதிக கிருமிகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறான நிலையில் ஸ்மார்ட்போனை தொட்டுவிட்டு நாம் கைகளை சுத்தம் செய்யாமல் முகம், மூக்கு போன்ற உடல் உறுப்புகளை தொடும்போது நோய் ஏற்படும். சில நேரம் வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமான பிரச்சனைகளும் ஏற்படலாம். கழிவறையில் இருந்தபடி மொபைல் பார்த்தல் மலம் கழிக்கும் அமைப்பிலும் பாதிப்பு ஏற்படும்.
இதையும் படிங்க: Health Tips: குட்டித்தூக்கம் போட ஆசையா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!