தூக்கம் வராம கஷ்டபடுறீங்களா... "இந்த நம்பர்கள் போதும்..." மருத்துவர்கள் சொல்லும் மேஜிக்.!!
தூக்கம் வராம கஷ்டபடுறீங்களா... இந்த நம்பர்கள் போதும்... மருத்துவர்கள் சொல்லும் மேஜிக்.!!
தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனும் தங்களது வயதிற்கேற்ப 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தற்போது மாறி வரும் அவசர வாழ்க்கையில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும் நிம்மதியான தூக்கத்தை பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் படுத்தவுடன் நல்ல தூக்கத்தை பெறுவதற்கான மருத்துவர்களின் அறிவுரைகளை இந்த பதிவில் காணலாம்.
தூக்கமின்மை
தூக்கமின்மையை ஒரு நோய் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முறையான தூக்கமில்லாதது மனிதனின் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல் வீக்கம் மற்றும் மன உளைச்சல் போன்ற பாதிப்புகள் வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியம் கிடைப்பதற்கு முறையான தூக்கம் அவசியம் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நல்ல தூக்கத்திற்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள்
நிம்மதியான உறக்கத்தை பெறுவதற்கு நமது படுக்கை அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் படுக்கையறையில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை கூறுகின்றனர். உறங்க செல்லும் முன் கவலை தரும் விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மகிழ்ச்சியான விஷயங்களை பேசுவது அல்லது நினைத்து பார்ப்பது நல்ல உறக்கம் கிடைக்க வழி வகுக்கும். மேலும் இரவு உணவாக எளிதாக செரிமானமாக கூடிய உணவுகளை எடுத்து கொள்வதும் நமது தூக்கத்தை தொந்தரவு செய்யாது. மேலும் இரவு தூக்கத்திற்கு முன்பாக கால் பாதங்களை சுடுநீரில் கழுவுவதும் நல்ல உறக்கத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சன் ஃப்ளவர் ஆயில் பயன்படுத்துப்பாவரா நீங்கள்.? "அதிகரிக்கும் மார்பக புற்றுநோய் அபாயம்..." ஷாக்கிங் ரிப்போர்ட்.!!
நிம்மதியான உறக்கத்திற்கு மூச்சுப் பயிற்சி
நல்ல தூக்கத்தை பெறுவதற்கு மருத்துவர்கள் மூச்சுப் பயிற்சியை பரிந்துரைக்கின்றனர். இதன்படி படுக்கையில் இடது பக்கமாக சாய்ந்து படுத்துக்கொண்டு ஒன்றிலிருந்து நான்கு எண்ணும் வரை மூச்சு இழுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒன்றிலிருந்து ஏழு எண்ணும் வரை மூச்சை தம் கட்டி வைத்திருக்க வேண்டும். இதன் பிறகு ஒன்றிலிருந்து எட்டு எண்ணும் வரை பிடித்து வைத்திருக்கும் மூச்சை மெதுவாக விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நிம்மதியான உறக்கம் படுத்த உடனே கிடைக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
இதையும் படிங்க: "உயர் இரத்த அழுத்த பிரச்சனையா..." 3 பழங்கள் போதும்.!! கவலையே வேண்டாம்.!!