சன் ஃப்ளவர் ஆயில் பயன்படுத்துப்பாவரா நீங்கள்.? "அதிகரிக்கும் மார்பக புற்றுநோய் அபாயம்..." ஷாக்கிங் ரிப்போர்ட்.!!
சன் ஃப்ளவர் ஆயில் பயன்படுத்துப்பாவரா நீங்கள்.? அதிகரிக்கும் மார்பக புற்றுநோய் அபாயம்... ஷாக்கிங் ரிப்போர்ட்.!!
தற்காலத்தில் பெண்களை தாக்கக்கூடிய மிகப்பெரிய நோய்களில் ஒன்றாக இருப்பது மார்பக புற்று நோயாகும். 35 வயதை தாண்டிய பெரும்பாலான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மார்பக புற்று நோய்க்கு மிகப்பெரிய காரணமாக அமைவது சமையல் எண்ணெயில் இருக்கக்கூடிய ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் தான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் ஆய்வ
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரை சேர்ந்த பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் என்ற நிறுவனம் மனிதர்கள் மற்றும் எலிகளிடமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் லினோலிக் அமிலம் எனப்படும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்ஸ் புற்றுநோய் தன்மை கொண்ட செல்களை ஊக்குவிக்கிறது என கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த அமிலம் சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் மற்றும் சோள எண்ணெய் போன்றவற்றில் நிறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொண்ட எலிகளுக்கு நோயின் தாக்கம் அதிகமிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. மேலும் லினோலிக் அமிலம் புற்று நோய் கட்டிகளில் புதிய ரத்த நாளங்களை உருவாக்குவதற்கும் அந்தக் கட்டிகளை மற்ற உறுப்புக்களுக்கு பரவச் செய்வதற்கும் உதவுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
ஆய்வின் முடிவு
ஸ்பெயின் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து நாம் அன்றாட உணவுக்காக பயன்படுத்தும் எண்ணெய்களில் கூட நமது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் புற்றுநோய் தாக்குவதற்கான அபாயம் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்த ஆய்வு தற்போது ஆரம்ப நிலையில் மட்டுமே இருக்கிறது என தெரிவித்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து இன்னும் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தெளிவான முடிவுக்கு வர முடியும் என தெரிவித்துள்ளனர். எனினும் சமச்சீர் உணவை பயன்படுத்துவதே புற்றுநோய் மற்றும் பிற நோய்களின் அபாயங்களில் இருந்து மனிதர்களை காக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். புற்றுநோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ள ஒமேகா-3 நிறைந்திருக்கக்கூடிய மீன் மற்றும் வால்நட்ஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதையும் படிங்க: "உயர் இரத்த அழுத்த பிரச்சனையா..." 3 பழங்கள் போதும்.!! கவலையே வேண்டாம்.!!
இதையும் படிங்க: இதயத்தை காக்கும் ஆம்லா... வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்.!! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா.!!