சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘டிசி’ பட நாயகி.. ஹெச்.வினோத் படத்தில் இணைந்த புதிய கூட்டணி!
சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘டிசி’ பட நாயகி.. ஹெச்.வினோத் படத்தில் இணைந்த புதிய கூட்டணி!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 49-வது திரைப்படமான ‘சூர்யா 49’ குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை வாமிகா கபி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், அவரது 49-வது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு நைட்டுக்கு எவ்ளோ? வெளிநாடு போலாமா? கலங்கடிக்கும் ஆபாச தொல்லை.. பதறும் நடிகை..!
இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற வாமிகா கபி, தற்போது முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருப்பது அவரது திரைப்பயணத்தில் முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சூர்யாவுடன் அவர் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளதால், இருவரது திரை கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவுடன் நடிப்பது குறித்து நெகிழ்ந்த இளம் நடிகை.. கண்களை எடுப்பது மிகவும் கடினம்!