×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு நைட்டுக்கு எவ்ளோ? வெளிநாடு போலாமா? கலங்கடிக்கும் ஆபாச தொல்லை.. பதறும் நடிகை..! 

 Actress Anangsha Biswas: திரைப்பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களால் நடிகை அதிர்ச்சியில் இருக்கிறார். 

Advertisement

படத்தில் வரும் காட்சிகளை பார்த்து நடிகையிடம் ஆபாசமாக நடந்துகொள்ளும் நபர்களை கண்டித்து இருக்கிறார். 

ஓடிடி ரிலீஸ்: 

கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் ஓடிடி வெப்ஸீரில் மற்றும் படங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமேசான் உட்பட பல்வேறு பிளாட்பார்ம்களில் நேரடியாக வெளியிடப்படும் வெப்சீரிஸ்கள் மக்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. ஓடிடி-யில் அதிகளவு குற்றம், வன்முறை, பாலியல் காட்சிகள் கொண்ட உள்ளடக்க சீரிஸ்களும் இருக்கின்றன. 

இதையும் படிங்க: படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏற்பட்ட படுகாயம்...! மருத்துவர் சொன்ன தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!!

மிர்சாபூர்: 

அந்த வகையில், ஓடிடியில் வெளியான மிர்சாபூர் இணையத்தொடர் படமாக உருவாகி வருகிறது. இந்த தொடரில் முக்கிய பாகத்தில் ஜெரினா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அணங்ஷா பிஸ்வாஸ் நடித்திருந்தார். தற்போது உருவாகும் மிர்சாபூர் படத்துக்காக அவரின் தோற்றத்தை மாற்ற 4 மாதங்களில் உடல் எடையையும் குறைத்து வருகிறார். 

பேட்டி: 

இதுதொடர்பாக நடிகை பேட்டி அளித்தபோது, "மிர்சாபூர் தொடருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அது தற்போது படமாக உருவாகிறது. இதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன். அவித்த உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் உடலெல்லாம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையும் சிகிச்சை பெற்றேன். 

பாலியல் தொல்லை: 

திரையில் நான் நடிக்காத கதாபாத்திரத்தை பார்க்கும் பலரும், நானும் அதுபோல என எண்ணி நிஜ வாழ்க்கையில் ஆபாச தொல்லை கொடுக்கின்றனர். வெப்சீரிஸில் எனது சுயதேவைக்காக பிறருடன் பாலியல் உறவில் இருப்பது போல கதாபாத்திரம் இருக்கும். அதனை பார்த்துவிட்டு நிஜத்திலும் நான் அப்படி இருப்பேன் என தவறாக நினைக்கிறார்கள். எனது சமூக கணக்குகளில் ஒரு இரவுக்கு எவ்வுளவு பணம் வாங்குவீர்கள்? 2 நாட்கள் வெளிநாடு சென்று வரலாமா? என அருவருப்பான செய்திகளை அனுப்புகிறார்கள். 

படிப்பே முக்கியம்: 

இதுபோன்ற மனநிலை மாற வேண்டும். நான் படித்துள்ளேன். எனக்கு மதுபானம் அருந்தும் பழக்கம், பார்ட்டி செல்லும் பழக்கங்கள் கிடையாது. எப்போதும் புத்தகங்களையே நான் விரும்புகிறேன். என்னை இதுபோல பேசுவது சாபமாக இருக்கிறது. அதே நேரத்தில், எனது நடிப்புக்கு கிடைத்த வெற்றியாக இதனை கவனிக்கிறேன்" என தெரிவித்தார்.

தொடரும் சர்ச்சை:  

தான் நடித்த கதாபாத்திரத்தால் நடிகை தனக்கு பாலியல் தொல்லை அனுபவம் இருப்பதாக கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திரையுலகில் நடிகைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பாலியல் தொல்லை கொடுப்பது, நடிக்க வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைப்பது என பல சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இதுபோன்ற தொல்லைகளும் தொடருகின்றன. 

இதையும் படிங்க: புகழின் உச்சத்தில் இருந்தவர்... இப்போ இப்படியா? விஜய் சாருக்கிட்ட என் நிலையை சொல்லணும்...முதியோர் இல்லத்தில் உள்ள மோகன் சர்மாவின் உருக்கமான கோரிக்கை!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #actress #Sexual Harassment #Mirzapur Actress Sexual Call
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story