படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏற்பட்ட படுகாயம்...! மருத்துவர் சொன்ன தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!!
'மைசா' படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை ராஷ்மிகா மந்தனா காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்களின் ஆலோசனையின்படி சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் 'மைசா' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிரப்பள்ளியில் நடைபெற்ற படப்பிடிப்பு
இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் 'மைசா' திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, போர் வீராங்கனையை ஒத்த அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கோண்டு இனப் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் அதிரப்பள்ளி காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடிக் காட்சிகளையும் அவர் நடித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: ஷாக் நியூஷ்! தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு!!!
பாடல் காட்சியின்போது விபத்து
இதையடுத்து பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ராஷ்மிகா மந்தனா எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, தேவையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சில வாரங்கள் ஓய்வு அறிவுரை
மருத்துவர்கள் காயத்தின் தன்மையை கருத்தில் கொண்டு சுமார் 6 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மைசா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ராஷ்மிகா மந்தனா தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் அவர் விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் படப்பிடிப்பில் இணைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீர் மூச்சுத்திணறல்.... சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் மருத்துவமனையில் அனுமதி..!!!