×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூர்யாவுடன் நடிப்பது குறித்து நெகிழ்ந்த இளம் நடிகை.. கண்களை எடுப்பது மிகவும் கடினம்!

சூர்யாவுடன் நடிப்பது குறித்து நெகிழ்ந்த இளம் நடிகை.. கண்களை எடுப்பது மிகவும் கடினம்!

Advertisement

‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீண்டும் 2வது முறையாக இணையும் படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.தற்போதைக்கு ‘சூர்யா 48’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்படும் இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். 

மேலும், இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், யோகிபாபு, எலங்கோ குமரவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் சமூக நீதியை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் கவனம் பெற்றது. 

அந்தப் படத்திற்குப் பிறகு சூர்யா – ஞானவேல் கூட்டணி மீண்டும் இணைவதால், ‘சூர்யா 48’ திரைப்படத்தின் கதை மற்றும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குநர் ஞானவேல் உண்மைச் சம்பவங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதைகளை உருவாக்குவதில் அறியப்பட்டவர் என்பதால், இந்தப் படமும் வலுவான கதைக்களத்துடன் உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இந்த கர்ப்பத்துக்கு காரணம் என் கணவர் இல்லை..! இன்ஸ்டாகிராம் நேரலையில் கதறி அழுது உண்மையை உடைத்த பிரபல பாடகி...! அதிர்ச்சி வீடியோ...!!!

‘சூர்யா 48’ திரைப்படத்தின் கதை தமிழகத்தில் ‘ரூ.5 மருத்துவர்’ என்று அறியப்பட்ட மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘சூர்யா 48’ திரைப்படம் குறித்து நடிகை கயாடு லோஹர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் அனுபவம் குறித்துப் பேசிய அவர், திரையில் சூர்யா நடிக்கும் போது அவரது நடிப்பை கவனித்துக் கொண்டிருப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சூர்யா சார் திரையில் இருக்கும்போது, அவரது நடிப்பைப் பார்க்கும்போது அவரை விட்டு கண்களை எடுப்பது மிகவும் கடினம்”என அவர் கூறியுள்ளார். சூர்யாவின் நடிப்பை நேரில் கவனிப்பது தன்னுடைய நடிப்புக்கும் புதிய அனுபவத்தை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #Surya 48 #surya #kayadu lohar #Tj ganavel
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story