மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், விஜய்–திரிஷா நடிப்பில் வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த ‘திருப்பாச்சி’, இயக்குநர் பேரரசுவின் அறிமுகப் படமாகும். விஜய்–திரிஷா கூட்டணி, ஆக்ஷன் காட்சிகள், குடும்பப் பின்னணி மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘திருப்பாச்சி’ திரைப்படத்தை அக்டோபர் 1-ஆம் தேதி மீண்டும் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்பை விநியோகஸ்தர் தரப்பான திருப்பதி ஃபிலிம்ஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. தற்போது அந்த ரீ-ரிலீஸ் தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது. புதிய இயக்குநர்களின் படைப்புகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு தலைமுறையினரின் படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் இடம்பெறுவதைத் தவிர்க்கும் வகையிலும் ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘திருப்பாச்சி’ படத்தை தமிழகத்தில் எப்போது மீண்டும் வெளியிடுவது என்பது குறித்து விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் திட்டமிட்டபடி ரீ-ரிலீஸ் நடைபெறுமா என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அக்டோபர் 1-ஆம் தேதி ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்த ‘ஏழு கடல் ஏழு மலை’, விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அதே நாளில் திரைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: அஜித்தை பார்க்க லண்டன் செல்லும் விஜய்? – ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்!