அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், சர்வதேச அளவில் நடைபெறும் Michelin Le Mans Cup 2026 தொடரில் தனது Ajith Redant by Virage அணிக்காக போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொடரின் அடுத்த போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற Silverstone Circuit-ல் செப்டம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
அதிகாரப்பூர்வ Le Mans Cup தளத்திலும் அஜித் குமார் LMP3 Pro/Am பிரிவில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று லண்டன் சென்றுள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
தமிழக முதலமைச்சரின் லண்டன் பயண தேதிகளும், அஜித் பங்கேற்கும் கார் பந்தய தேதிகளும் ஒரே காலகட்டத்தில் அமைந்துள்ளதால், விஜய் சில்வர்ஸ்டோன் சென்று அஜித்தின் பந்தயத்தை நேரில் பார்வையிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அஜித்தை பார்க்க லண்டன் செல்லும் விஜய்? – ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்!
அஜித் குமார் ஏற்கெனவே லண்டனில் தனது அணியினருடன் பயிற்சி மற்றும் பந்தயத்துக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறார். பந்தயம் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் சுற்றுப்பாதையையும் அவர் தனது குழுவினருடன் ஆய்வு செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனால், அஜித்தின் பந்தயத்தை விஜய் நேரில் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு அஜித் குமார் வரவேற்பு தெரிவித்ததுடன், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சிக்கு இது முக்கியமான முன்னெடுப்பாக அமையும் என்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இருவரின் பயணங்களும் ஒரே நேரத்தில் லண்டனில் அமைந்திருப்பது விஜய் - அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அஜித்தை பார்க்க லண்டன் செல்லும் விஜய்? – ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்!