×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!

“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!

Advertisement

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘அசுரன்’. இப்படத்தில் தனுஷ், சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கென் கருணாஸ், தனுஷின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ‘அசுரன்’ படத்தில் தனுஷ் நடித்த கதாபாத்திரம் தொடர்பாக நடிகர் கருணாஸ் பகிர்ந்துள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. கருணாஸ் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவலின்படி, ‘அசுரன்’ கதையை இயக்குநர் வெற்றிமாறன் முதலில் அவரிடம் கூறியுள்ளார். அப்போது, கருணாஸும் அவரது மகனும் இப்படத்தில் நடிக்க வைக்க வெற்றிமாறன் கூறியதாகத் தெரிகிறது.

ஆனால், முழு கதையையும் கேட்ட கருணாஸ், “இது ஒரு மாஸ் ஹீரோ நடிக்க வேண்டிய படம். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” எனக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் வெற்றிமாறன், தனுஷை வைத்து படத்தை இயக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘அரசன்’ படத்தில் இப்படியொரு சிம்புவா? பிரியங்கா மோகன் கொடுத்த ஹைப்!

இறுதியில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் சிவசாமி கதாபாத்திரத்தில் நடிக்க, அசுரன் உருவானது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், 100 நாட்களைக் கடந்தும் ஓடியது. மேலும், கருணாஸின் மகன் கென் கருணாஸ், இப்படத்தில் தனுஷின் மகனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று தொடக்கம்: வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் யார்?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Asuran #karunas #Dhanush #vetrimaran
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story