×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று தொடக்கம்: வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் யார்?

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று தொடக்கம்: வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் யார்?

Advertisement

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

10-வது சீசன் என்பதால் இந்த முறை போட்டியாளர்கள் பட்டியல் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. சின்னத்திரை, சினிமா, சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய தகவல்களின் அடிப்படையில் அவினாஷ் அசோக், குமரன் தங்கராஜன், லட்சுமி பிரியா, ஷத்திகா, சந்தினி தமிழரசன், தன்யா பல்லத், நவீன் குமார், லிங்கேஸ்வரன் என்கிற பிளாக் பாண்டி, முகமது அன்சார், ஆர்யன், புவி அரசு, வினோத் பாபு, ஸ்ரீதர், பார்கவ் ராம் உள்ளிட்டோரின் பெயர்கள் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ‘அரசன்’ படத்தில் இப்படியொரு சிம்புவா? பிரியங்கா மோகன் கொடுத்த ஹைப்!

ஆனால், இந்தப் பெயர்களில் சில அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிக்பாஸ் சீசன் 10-ன் இறுதி போட்டியாளர் பட்டியல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று நடைபெறும் பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சியில்தான் வீட்டுக்குள் நுழையும் போட்டியாளர்கள் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முகங்கள், எதிர்பாராத கூட்டணிகள், சண்டைகள், காதல், நட்பு என இந்த சீசனில் என்னென்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் வெற்றிமாறனின் உதவி இயக்குநர்? பரபரக்கும் புதிய தகவல்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#BiggBoss Tamil #Biggboss tamil 10 #vijay tv #vijay sethupathi #Jio Hotstar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story