×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

‘அரசன்’ படத்தில் இப்படியொரு சிம்புவா? பிரியங்கா மோகன் கொடுத்த ஹைப்!

‘அரசன்’ படத்தில் இப்படியொரு சிம்புவா? பிரியங்கா மோகன் கொடுத்த ஹைப்!

Advertisement

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடக்கம் முதலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், படத்தில் பிரியங்கா மோகன் இணைந்திருப்பது குறித்த தகவலும் கவனம் பெற்றுள்ளது.

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ உலகத்துடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரியங்கா மோகன் ‘அரசன்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அவர் இணைந்ததாகவும், சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், சிம்பு–பிரியங்கா மோகன் ஜோடி திரையில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் வெற்றிமாறனின் உதவி இயக்குநர்? பரபரக்கும் புதிய தகவல்!

வெற்றிமாறன் இயக்கம், சிலம்பரசன் நடிப்பு, அனிருத் இசை என பல முக்கிய கூட்டணிகள் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மேலும், சமீபத்தில் சிலம்பரசன் ‘அரசன்’ திரைப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகாது என்று தெரிவித்துள்ளார். படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்ய விரும்பவில்லை என்றும், ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் படம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதேபோல் ‘The World of Arasan’ என்ற பிரத்யேக க்ளிம்ப்ஸ் தீபாவளி காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘அரசன்’ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப்ரியங்கா மோகன், 'அரசன்' திரைப்படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத முற்றிலும் வித்தியாசமான ஒரு சிலம்பரசனைத் திரையில் காண்பீர்கள் என்றும், நடிகர் சிம்புவுடன் இணைந்து முதன்முறையாகத் தான் நடித்து வருவது தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படமாக அமையும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சுருதிஹாசன் போலி ஆபாச வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #Priyanka mohan #Arasan #vetrimaran #World of Arasan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story