சமூகம்

நண்பனுக்காக கணவனை அந்தரங்க இடத்தில் தாக்கிய மனைவி; தீவிர சிகிச்சையில் கணவர்

Summary:

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை. இவர் கூலி வேலை செய்துவருகிறார். அவருக்கு வயது 50. அவரின் மனைவி ஜெயந்திக்கு 40 வயது. 

சம்பவத்தன்று அவர்கள் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு  செல்ல  மனைவியை அழைத்துள்ளார் செந்தாமரை. ஆனால், அவர் வர மறுத்துள்ளார்.  இதனால் திருவிழாவைப் பார்க்க செந்தாமரை மட்டும் தனியாகச் சென்றார். 

விழா முடிவதற்குள் வீட்டுக்கு திரும்பிய செந்தாமரைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீட்டிற்குள் வந்தபொழுது அவரது மனைவி ஜெயந்தி, தன்னுடைய ஆண் நண்பருடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த செந்தாமரை மிகவும் ஆத்திரமடைந்தார். 

அதனால், அந்த நபரை அடித்து உதைத்தார் செந்தாமரை. இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய ஜெயந்தி, தன்னுடைய கணவரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் செந்தாமரையோ, ஜெயந்தியின் ஆண் நண்பரை தாக்குவதை நிறுத்தவில்லை. இந்தச் சமயத்தில் ஆண் நண்பரைக் காப்பாற்ற செந்தாமரையின் மர்ம உறுப்பைத் தாக்கியுள்ளார் ஜெயந்தி. 

ஆண் நண்பனுக்காக மனைவி செய்த இந்த செயலால், அவரின் கணவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இதுதொடர்பாக  போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயந்தியிடமும் அவரின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். 


Advertisement