இந்தியா சமூகம்

மனைவியோடு சேர்ந்து நண்பரை வெட்டி கொலை செய்து பின்பு மனைவியையும் கொன்ற கொடூரன்; காரணம் என்ன?

Summary:

man killed his partner and wife in gurugoan

ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியில் நண்பரிடம் வாங்கிய 40 லட்சம் கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவி மற்றும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து அந்த நபரை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வீசியுள்ளனர். மேலும் தன்னுடன் தற்கொலை செய்து கொள்ள மறுத்த மனைவியை வெட்டிக்கொலை செய்துள்ளார் அந்த நபர்.

குர்கான் பகுதியை சேர்ந்த ஹார்நெக் சிங் என்ற நபர் தன்னுடைய கூட்டாளியான ஜஸ்கரன் சிங்கிடம் 40 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஜஸ்கரன் சிங்க் அந்த தொகையை பலமுறை கேட்டும் ஹார்நெக் தர மறுத்துள்ளார். இதனால் அக்டோபர் 14ஆம் தேதி ஜஸ்கரன் சிங்க் பணத்தை திருப்பி கேட்க ஹார்நெக் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஹார்நெக் தனது மனைவி குரமேஹர் கவுர் மற்றும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து ஜஸ்கரன் சிங்கை கொலை செய்துள்ளனர். பின்னர் ஜஸ்கரன் சிங்கின் உடலை பல துண்டுகளாக வெட்டி ஒரு பையில் அடைத்துள்ளனர். வெட்டிய துண்டுகளை ஜஸ்கரன் சிங்கின் சொந்த ஊரான லூதியானா பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு ஜஸ்கரன் சிங்கின் உடல் பாகங்களை ரோட்டில் ஓரமாக ஆங்காங்கே வீசி சென்றுவிட்டனர்.

மனைவியுடன் வீட்டிற்கு திரும்பிய ஹார்நெக் போலீசிடம் மாட்டிக் கொள்வோம் என பயந்துள்ளார். இதனால் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு அவரது மனைவி மறுக்கவே தனது மனைவியின் கழுத்தில் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார் ஹார்நெக். மேலும் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க தன்னுடைய உடலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளார்.

பின்பு தகவல் அறிந்து வந்த போலீசார் ஹார்நெகிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து என் மனைவியை கொன்று விட்டு என்னை காயப்படுத்தி சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார். ஆனால் போலீசார் இதனை நம்ப மறுத்து மனைவியை மட்டும் கொலை செய்தவர்கள் உன்னை ஏன் கொலை செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் தவித்த ஹார்நெக் நடந்த உண்மைகள் அனைத்தையும் போலீசாரிடம் உளறினார். பின்னர் ஹார்நெக் சிங்கை போலீசார் கைது செய்தனர்.


Advertisement